School Anthem
பாடசாலைக் கீதம்
அருள் நிறை அம்பிகை திருவருள் மிகவே
அமைகாரேறும் திருமூதூர்
அன்பொடு இராமகிருஷ்ண சங்க
ஆண் தமிழ் மாணவர் சாலை
பெருமைகொள் தவமுனி இசை தரு நாடு
பெண்மை அறந்திகழ் நாடு
வாழ்க… வாழ்க… வாழ்க…
மகிதலம் ஓங்கிட வாழ்க
தானம் அறங்கலை ஞானம் உயர்ந்த
சமரச வாழ்வுதலை நிமிர்க
மாணமுடன் தமிழ் மாணவர் வாழ்க
வளவயல் செந்நெல் வளம் பெறுக
வாழ்க… வாழ்க… வாழ்க…
மகிதலம் ஓங்கிட வாழ்க
தெங்கொடு கன்னல் சிறந்திடு முக்கனி
தென்றல் உலாவ விளைவுயர்க
செந்தமிழ் மாணவர் தேகசுகம் பெற
தேவர்கள் பூசை சிறந்திடுக
வாழ்க… வாழ்க… வாழ்க…
மகிதலம் ஓங்கிட வாழ்க.
Comments
Post a Comment