நாளை (29/12/2018) எமது பாடசாலையில் நடைபெறவுள்ள சிரமதானப் பணிகளில் பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் அழைக்கப்படுகின்றீர்கள். நேரம்: காலை 8.00 தகவல்:- அதிபர்
எமது பாடசாலையில், கடந்த 6 மாத காலமாக ஆங்கில பாடப் பயிலுனர் ஆசிரியராகக் கடமையாற்றிய Mr. Ganesharajah Keathigshan அவர்களின் பிரியாவிடை வைபவத்தின்போதான புகைப்படங்கள்.
கமு/ காரைதீவு இராம கிருஷ்ண சங்க ஆண்கள் பாடசாலையின் 110 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு எதிர்வரும் 04.11.2018 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெறவுள்ளதால், சகல பழைய மாணவர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ்வண்ணம், 110 ஆவது ஆண்டு நிறைவு ஏற்பாட்டுக் குழு, கமு/ இ.கி.ச. ஆண்கள் பாடசாலை, காரைதீவு.
வாணி விழாவை முன்னிட்டு, எமது பாடசாலையினால் ஆண்டு தோறும் வெளியிடப்படும் "ஜெயதீபம்" எனும் நூலானது, இந்த வருடம் 110 ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு மலராக, காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் திரு. சபாபதி நேசராஜா அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. மேலதிக புகைப்படங்களிற்கு இங்கே அழுத்தவும்
இந்த ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையைச் சேர்ந்த Kenthiramoorthy Kajaruksan (191) Niththiyananthan Thilan (183) Nagendran Ruvinayan (165) Segar Mayuran (164) ஆகிய மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இதில், Mas. Kenthiramoorthy Kajaruksan கோட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும், மாவட்ட மட்டத்தில் 7 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.
110 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டிய தேவையுள்ளது. எனவே பழைய மாணவர்கள் அனைவரும், பழைய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள். விண்ணப்பப் படிவங்களை நேரடியாக அதிபரிடம் கையளிக்க முடியும். அல்லது பாடசாலை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும். மின்னஞ்சல்:- rkmbskaraitivu@gmail.com விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.
நாளை (01/09/2018) எமது பாடசாலையில் நடைபெறவுள்ள சிரமதானப் பணிகளில் பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் அழைக்கப்படுகின்றீர்கள். நேரம்: காலை 8.00 தகவல்:- அதிபர்
இன்றைய தினம் எமது பாடசாலையில் இடம்பெற்ற மாணவ தலைவர்களிற்கான சின்னம் சூட்டும் விழாவின்போதான புகைப்படங்கள். மேலும் புகைப்படங்களிற்கு இங்கே அழுத்தவும்.....
பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சிறுநீரக நோய்த்தடுப்பு பற்றியும், போதைப்பொருள் பாவனையால் உண்டாகும் விளைவுகள் பற்றியும் வைத்திய அதிகாரி திருமதி ஜீ. சிவசுப்பிரமணியம் அவர்களினால் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது.
பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கைகழுவல் வேலைத்திட்டம் தொடர்பாகவும், டெங்கு தடுப்புத் தொடர்பாக சுற்றுச்சூழலைச் சுத்தம் செய்யும் விதம் தொடர்பாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் திரு சா. வேல்முருகு அவர்களினால் மாணவர்களிற்கு அறிவுரை வழங்கப்பட்டது.